பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன-
‘A’ : துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-
• 2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XVIII ஆம் பகுதி மற்றும் ஐந்தாம் தொகுதியின் III, IV, V மற்றும் VI ஆம் பகுதிகளையும்;
• 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் IV ஆம் பகுதி மற்றும் மூன்றாம் தொகுதியின் II ஆம் பகுதி
இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானங்கள் -
(ii) 2015 நவெம்பர் 20 ஆந் திகதிய 1941/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(iii) 2016 பெப்புருவரி 01 ஆந் திகதிய 1952/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு நிதியம் பற்றிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை
(v) 2014 ஆம் ஆண்டுக்கான வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ வீ.எஸ். இராதாகிருஷ்ணன்
(ii) கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண
(iii) கௌரவ எஸ். பிரேமரத்ன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்
பொலிஸ் திணைக்களத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகளின் பதவியுயர்வு வாய்ப்புக்களில் போது கையாளும் நிபந்தனைகளிலான சிக்கல்கள் தொடர்பானது
ஒத்திவைப்புப் பிரேரணை
“பெருந்தோட்டத்துறையிலுள்ள தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2016 பெப்ரவரி 26ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks