E   |   සි   |  

2016 பெப்ரவரி 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன-

‘A’ : “தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்)”
‘B’ : “நுண்நிதியளிப்பு”

மேற்சொன்ன சட்டமூலங்கள் சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

‘C’ : காலஞ்சென்ற முன்னாள் சனாதிபதி டீ.பி. விஜேதுங்க அவர்களின் உருவப்படம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச் சேவைக் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரி
(ii) 2013/14 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை பொஸ்பேட் நிறுவனம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iii) 2014 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயல்திறன் அறிக்கை

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14(1) ஆம் பிரிவின் கீழ் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரினால், செஸ் வரி தொடர்பில் விதிக்கப்பட்ட கட்டளைகள்

(iv) 2015 ஆண்டு நவெம்பர் மாதம் 20 ஆம் திகதிய 1941/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(v) 2015 ஆண்டு நவெம்பர் மாதம் 20 ஆம் திகதிய 1941/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(vi) 2015 ஆண்டு திசெம்பர் மாதம் 11 ஆம் திகதிய 1944/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கெளரவ டிலான் பெரேரா - 2 மனுக்கள்
(ii) கெளரவ மயந்த திசாநாயக்க                   
(iii) கெளரவ இந்திக அநுருத்த ஹேரத்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு வினாக்கள் கேட்கப்பட்டன:-

(i) கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க
(ii) கௌரவ பந்துல குணவர்தன
(iii) கௌரவ அஜித் மான்னப்பெரும
(iv) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்த அவர்கள்

யாழ்ப்பாணத்தில் பாதை அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பானது

கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

துறைமுக வாகனங்களுக்காக பெருகி வரும் நுழைவுக் கட்டண அதிகரிப்பு


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் பற்றி கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழ் எழுப்பிய வினாவுக்கு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான, கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-

(i) வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் - வேலையாளர்களுக்கு தொழில்தருநர்களினால் தேசிய குறைந்த பட்ச வேதனத்தைக் கொடுப்பனவு செய்வதற்காகவும் அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்காகவும் ஏற்பாடுசெய்வதற்கானது

(ii) வேலையாளர்களின் வரவுசெலவுத் திட்ட நிவாரணப்படி - வேலையாட்களுக்கு தொழில்தருநர்களினால் வரவுசெலவுது்திட்ட நிவாரணப்படியொன்றினைக் கொடுப்பனவு செய்வதற்காகவும் அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்காகவும் ஏற்பாடு செய்வதற்கானது


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ எம். ஏ. சுமந்திரன் அவர்களுக்கு “கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தம்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 46 அ (2) (அ) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் ஒவ்வொரு மாகாண சபைக்கும் ஆற்றுப்படுத்தப்பட்டது.

(ii) கெளரவ ஹர்ஷன ராஜகருணா அவர்களுக்கு “இலங்கை சுற்றாடலியல் தொழில் வல்லுநர்கள் நிறுவக (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஆட்களைப் பதிவுசெய்யும் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மாநகர திடக் கழிவுகளை புத்தளத்திற்கு கொண்டு செல்லல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மொஹமட் நவவி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1745 மணியளவில் பாராளுமன்றம் 2016 பெப்ரவரி 11ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks