பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
நிருவாக அலுவல்கள் தொடர்பான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) சட்டத்தின் 17(3) (இ) பிரிவின் கீழ் இரு அறிவித்தல்கள் ‘A’, ‘B’
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2013 - 2014 ஆம் ஆண்டுக்கான லங்கா லொஜிஸ்ரிக்ஸ் அன்ட் ரெக்னொலொஜிஸ் லிமிரெட்
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
(iii) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியம்
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய மனிதவள அபிவிருத்தி சபை
(v) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கைக் காணிகள் மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம்
(vi) 2012/2013 ஆம் ஆண்டுக்கான களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை லிமிரெட்
(vii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபை
(viii) 2013 ஆம் ஆண்டுக்கான தி அசோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட்
(ix) 2013 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சிச் சேவை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(x) 2014 ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சு
(xi) 2009, 2010, 2011, 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கெளரவ சந்திம வீரக்கொடி - நான்கு மனுக்கள்
(ii) கௌரவ பிமல் ரத்நாயக்க - மூன்று மனுக்கள்
(iii) கௌரவ எட்வட் குணசேகர
(iv) கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி
(v) கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே - நான்கு மனுக்கள்
(vi) கௌரவ க. துரைரெட்ணசிங்கம்
(vii) கெளரவ பாலித தெவரப்பெரும - ஏழு மனுக்கள்
(viii) கெளரவ மனுஷ நாணாயக்கார
(ix) கெளரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம
(x) கௌரவ ரவீந்திர சமரவீர - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்
இந்நாட்டின் உயர் அரசியல்வாதிகளின் சில குடும்ப உறுப்பினர்களின் வெளிநாட்டுக் கணக்குகள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
எம்பிலிப்பிட்டிய மகா-எலையில் பொலிஸ் தாக்குதல் காரணமாக மரணமடைந்த நபர் பற்றி கௌரவ அநுர திசாநாயக்க அவர்களினால் கேட்கப்பட்ட வினாவிற்கான இடைக்கால பதிலினை சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்நாயக்க அவர்கள் அளித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ புத்திக பத்திறண அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(i) மவுன்ட் கார்மல் கல்வி நிறுவகம் (கூட்டிணைத்தல்)
(ii) எஸ்.பீ. நாவின்ன மன்ற (கூட்டிணைத்தல்)
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (i) மற்றும் (ii) முறையே கல்வி மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர்களுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.
(iii) கெளரவ செஹான் சேமசிங்க அவர்களுக்கு “அனுர விதானகமகே பிரஜா சங்வர்தன மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 8 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளை
(ii) விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு கட்டளைகள்
(iii) உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான பிரேரணை
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 9 மற்றும் 10 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையின் அனுமதியுடன் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டன:-
• குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)
• தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“கூட்டுறவு சங்கங்களுக்கான போதிய முகாமைத்துவம்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ எட்வட் குணசேகர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1915 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஜனவரி 28ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks