பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்க சேவை ஆணைக்குழு
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு
(iv) 2014 ஆண்டுக்கான மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றறிக்கைகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கெளரவ வஜிர அபேவர்தன - பத்து மனுக்கள்
(ii) கெளரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன - இரண்டு மனுக்கள்
(iii) கெளரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார
(iv) கௌரவ எச்.ஆர். சாரதீ துஷ்மந்த
(v) கௌரவ எட்வட் குணசேகர - ஐந்து மனுக்கள்
(vi) கெளரவ புத்திக பத்திறண - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்
இந்து இலங்கை ஒப்பந்தம் மற்றும் வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பானது
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
ஓய்வூதிய சம்பளம் கணக்கிடும்போது ஆயுதப் படை உத்தியோகத்தர்களுக்கு தங்கள் சம்பளத்தின் 85% கிடைக்கப் பெறாமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை பற்றி கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் எழுப்பிய வினாவுக்கு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) – குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2016) ஒதுக்கப்பட்ட இருபத்திரெண்டாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“தொலைக்காட்சி நாடக ஒளிபரப்பு நேர வருமானத்தின் குறித்த சதவீதத்தினை தயாரிப்பாளர்களுக்கு செலுத்தல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றமானது 2015 டிசம்பர் 18ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2016]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks