பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ சந்திம வீரக்கொடி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.-
‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 ஆம் ஆண்டிற்கான யாழ்ப்பாண மாவட்ட செயலகம்
(ii) 2014 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி நிதித் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ துமிந்த திசாநாயக்க - மூன்று மனுக்கள்
(ii) கெளரவ வசந்த அலுவிஹாரே - இரண்டு மனுக்கள்
(iii) கெளரவ விக்டர் அந்தனீ
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) பிரதம அமைச்சரும் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க
(ii) கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க
ஆகியோர் சபையில் கூற்றுக்களை முன்வைத்தனர்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
விளையாட்டில் ஊக்குவிப்புப் பதார்த்தப் பயன்பாடிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
சபையால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“2015 ஜுன் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்த கூற்று” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஜூன் 26ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks