பார்க்க

E   |   සි   |  

2015 ஜூன் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ லக்ஷமன் கிரிஎல்ல                   
(ii) கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள்

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் வழங்கல் தொடர்பான கருத்திட்டத்தை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மைக்கு (ICTA) கைமாற்றல் சம்பந்தமாக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தொர்பானது

(ii) கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்

1986ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரிம சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள் தொடர்பானது


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ ராஜீவ விஜேசிங்க அவர்களுக்கு “இலங்கைச் சனநாயக சோசலிசகக் குடியரசின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கானதொரு” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் பிரதம அமைச்சரும் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமானவருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

கௌரவ ஆர். யோகராஜன் அவர்களால் 2015.06.23 அன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்ட “தேர்தல் சீர்திருத்தங்கள்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை தொடரப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஜூன் 25ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks