பார்க்க

E   |   සි   |  

2015 மே 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


கௌரவ நெரன்ஜன் விக்கிரமசிங்க அவர்களின் மரணம் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ ஆர்.டீ. விமலதாச, அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.-

‘A’  : திகதியிடப்பட்டாத பிரேரணைகளுக்கான தீர்ப்பு


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கெளரவ பி. ஹரிசன்                   
(ii) கெளரவ சுஜீவ சேனசிங்க - பதினொன்று மனுக்கள்                   
(iii) கெளரவ விஜித ஹேரத்                   
(iv) கெளரவ அநுர திசாநாயக்க - ஐந்து மனுக்கள்
(v) கெளரவ விக்டர் அந்தனீ - இரண்டு மனுக்கள்
(vi) கௌரவ அஜித் குமார                   
(vii) கெளரவ புத்திக பதிரண - ஆறு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பானது

கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

அரச ஊழியர்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் விநியோகம் தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i) பிரதம அமைச்சரும் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க
(ii) நீதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ
(iii) நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க

ஆகியோர் சபையில் கூற்றுக்களை முன்வைத்தனர்.


பாராளுமன்ற ஆலோசனைக் குழுக்கள்

1. 2015 மாச்சு மாதம் 04 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை மூலம் தடைபெறாமல்,

• மக்கள் ஒழுங்கு, அனர்த்த முகாமை மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழு - மக்கள் ஒழுங்கு மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழு

எனவும்

• உள்நாட்டலுவல்கள் மற்றும் கடற்றொழில் பற்றிய ஆலோசனைக் குழு - உள்நாட்டலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழு

எனவும்

• பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய ஆலோசனைக் குழு - பொது நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய ஆலோசனைக் குழு

எனவும்

• நீர்ப்பாசன மற்றும் கமத்தொழில் பற்றிய ஆலோசனைக் குழு - கமத்தொழில் பற்றிய ஆலோசனைக் குழு

எனவும்

• நெடுஞ்சாலைகள், உயர் கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பற்றிய ஆலோசனைக் குழு - நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பற்றிய ஆலோசனைக் குழு

எனவும்

• நீதி மற்றும் தொழில் உறவுகள் பற்றிய ஆலோசனைக் குழு - நீதி பற்றிய ஆலோசனைக் குழு

எனவும்

• வெகுசன ஊடக, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழு - வெகுசன ஊடகம் பற்றிய ஆலோசனைக் குழு

எனவும்

• துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானச் சேவைகள் பற்றிய ஆலோசனைக் குழு - துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பற்றிய ஆலோசனைக் குழு

எனவும் கெளரவ பாராளுமன்ற சபை முதல்வர் பிரேரித்தார்.

2. பின்வரும் பதினொரு (11) ஆலோசனைக் குழுக்கள் பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக என்றும்,

(i) அனர்த்த முகாமைத்துவம் பற்றிய ஆலோசனைக் குழு
(ii) தொழில் பற்றிய ஆலோசனைக் குழு
(iii) திறன் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை தொழில் பயிற்சி பற்றிய ஆலோசனைக் குழு
(iv) உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பற்றிய ஆலோசனைக் குழு 
(v) கிராமிய பொருளாதார அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழு
(vi) மாகாண  சபைகள் மற்றும் பிதேச அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக் குழு
(vii) விசேட கருத்திட்டம் பற்றிய ஆலோசனைக் குழு
(viii) பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழு
(ix) விமானச் சேவைகள் பற்றிய ஆலோசனைக் குழு 
(x) நீர்ப்பாசனம் பற்றிய ஆலோசனைக் குழு
(xi) கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள்  பற்றிய ஆலோசனைக் குழு

106 ஆம் இலக்க நிலையியற் கட்டளை மூலம் தடைபெறாமல் ஒவ்வோரு ஆலோசனைக் குழுவும் 109 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும் விடயங்கள் தொடர்பில் பரிசீலனை செய்து அறிக்கையிடும் பொருட்டு ஐந்து (5) பேருக்குக் குறையாததும் இருபத்தைந்து (25) பேருக்கு விஞ்சாததுமான உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

ஒவ்வோர் ஆலோசனைக் குழுவும் கூட்டநடப்பெண்ணாக மூன்று (3) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

எனும் கெளரவ பாராளுமன்ற சபை முதல்வர் முன்வைத்த பிரேரணையை சபை இணங்கியேற்றது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

குடிவருவோர், குடியகல்வோர் (திருத்தச்) சட்டமூலம்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து, 1745 மணியளவில் பாராளுமன்றம் 2015 மே 21ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks