பார்க்க

E   |   සි   |  

2015 மார்ச் 17ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ சந்திம வீரக்கொடி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.-

‘A’  : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் ஆண்டறிக்கை

(ii) 2009 , 2010 , 2011 , 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கான நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளமுகாமைத்துவ அமைச்சின் வருடாந்த செயற்திறன் அறிக்கைகள்

(iii) 1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உரித்ததுப் பதிவுச் சட்டத்தின்  67 ஆம்  பிரிவின் கீழ் காணி, காணி அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2014 ஒற்றோபர் 31 ஆந் திகதிய 1886/58 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கெளரவ அகில விராஜ் காரியவசம்                   
(ii) கௌரவ கருப்பையா வேலாயுதம் - பன்னிரண்டு மனுக்கள்
(iii) கெளரவ அநுர திசாநாயக்க - நான்கு மனுக்கள்
(iv) கெளரவ அசோக் அபேசிங்க - இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள்

இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு தொடர்பானது

(ii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி முறிகள் தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

பிரதம அமைச்சரும் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு மற்றும் திறைசேரி முறிகள் தொடர்பான அமைச்சு சம்பந்தப்பட்ட இரு கூற்றுக்களை விடுத்தார்.


தனிப்பட்ட  விளக்கங்கள்

கௌரவ ராஜீவ விஜேயசிங்க அவர்கள் தனது அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா தொடர்பாக தனிப்பட்ட விளக்கமொன்றினை வழங்கினார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ (வண.) அதுரலியே ரதன தேரர் அவர்களுக்கு “சமாதானம், கல்வி, வலுவளிப்பு மற்றும் அபிவிருத்திக்கான விளையாட்டு நிறுவக (SPEED) (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் பிரேரிக்கப்பட்டன:-

(i) குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை - விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதோடு எதிர்வரும் தினமொன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டது
(ii) மடஹபொல ஸ்ரீ ரத்னபாலராம விகாரையின் பௌத்த கல்வி அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - சபையால் நிறைவேற்றப்பட்டது


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“தேர்தல் வாக்குறுதிகளுக்கு அமைவாக நெல், இறப்பர் மற்றும் தேயிலையினை ஒரு நிலையான விலையின் கீழ் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ லஷ்மன் யாப்பா அபேவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து,  மணியளவில் பாராளுமன்றம் 2015 மார்ச் 18ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks