பார்க்க

E   |   සි   |  

2015 மார்ச் 13ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


கௌரவ சபாநாயகரின்  வரவேற்புரை

கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் இந்தியப் பிரதம அமைச்சர் அதிமேதகு ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களை வரவேற்று உரையாற்றினார்.


இந்தியப் பிரதம அமைச்சர் அதிமேதகு ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுப் பாராளுமன்றத்தில் நிகழ்த்தும் உரை

pm-modiஇந்தியப் பிரதம அமைச்சர் அதிமேதகு ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் சபையில் இன்று பி.ப. 3.15 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றினார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாராளுமன்ற சபா கூடத்தினுள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றிய நான்காவது வருகை தரு பிரதமராவார்.


நன்றி உரைகள்

கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பிரதம அமைச்சரும் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் கௌரவ நிமல் சிறிபால த சில்வா, பாராளுமன்ற எதிர்க்கட்சியின் தலைவர் ஆகியோர் நன்றியுரைகளை நிகழ்த்தினர்.


அதனையடுத்து, 1605 மணியளவில் பாராளுமன்றம் 2015 மார்ச் 17ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks