பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ சந்திம வீரக்கொடி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் 3 அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.-
(i) ‘A’ : “புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபை (திருத்தம்)” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
(ii) ‘B’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம்
(iii) ‘C’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரிற்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ (கலாநிதி) சரத் அமுனுகம அவர்கள் சமர்ப்பித்தார்.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ கருப்பையா வேலாயுதம் - பதினைந்து மனுக்கள்
(ii) கெளரவ சீ. பீ. ரத்நாயக்க
(iii) கெளரவ மஹிந்த யாப்பா அபேவர்தன
(iv) கெளரவ மனுஷ நாணாயக்கார
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள் ‘துறைமுக நகர கருத்திட்டம்’ சம்பந்தமான நிலையியற் கட்டளை 23(2) கீழ் கூற்றொன்றை விடுத்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க, புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தைத் திருத்துவதற்காக
புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபை (திருத்தம்)
சட்டமூலத்தினை கெளரவ சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பிரேரித்தார்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“தேர்தலின் பின்னரான வன்முறைகள்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ நிமல் சிறிபாலடி சில்வா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1805 மணியளவில் பாராளுமன்றம் 2015 பெப்ரவரி 18ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks