பார்க்க

E   |   සි   |  

2015 பெப்ரவரி 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2013 ஆம் ஆண்டுக்கான வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ நாமல் ராஜபக்ஷ அவர்களுக்கு “கஹவில்கொட ஜாதிக உறும உயன எண்ணக்கரு நூதனசாலை அபிவிருத்தி நிதிய (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்)
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 164; எதிராக 01), ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூல இரண்டாம் மதிப்பீடு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.


இன்று ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம்,  சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து, 1740 மணியளவில் பாராளுமன்றம் 2015 பெப்ரவரி 10ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks