பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2006-12-11
“அமா (d)தகர (d)திய (g)களா (g)களா ...” , பாராளுமன்றத்தில், அண்மையில் நடைபெற்ற பௌத்த சமய இசை நிகழ்ச்சியான “அமா (d)தகர” வை ஆரம்பித்து வைத்த பாடல் இதுவாகும். பாராளுமன்ற பௌத்த சமய சங்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வு டிசம்பர் 11, 2006 அன்று, பாராளுமன்ற வளாகத்தின் குழு அறை 1 இல் நடந்தேறியது. இந்தப் பாடலை இந்நிகழ்வில் பாடியவர் வேறு யாருமல்ல, மிகச் சிறந்த பாடரான திரு. விக்டர் இரத்னாயக்க அவர்கள் தான் என்பதை நீங்கள் இப்போது ஊகித்திருப்பீர்கள்.
அவரது மூத்த மகனான ஜயந்தவுடன் இந்நிகழ்வில் பங்கேற்க வருகை தந்திருந்த இம்மாபெரும் கலைஞர், மந்திரத்தால் கட்டுப்பட்டவர்கள் போன்ற பார்வையாளர்களின் கூட்டத்தை இங்கே தரிசித்தார். இந்நிகழ்வில் அரங்கேறிய எட்டுப் பாடல்களில், “அமா (d)தகர..” (அமிர்தம் பாய்ந்து....), “ஆதரயே உல்பத்த வூ அம்மா” ( அம்மா எனும் அன்பின் ஊற்று..), “ (b)புது (h)காம துருவோ அபித் தக்கின எத்தி” ( புத்த பெருமானை நாமும் தரிசித்திருக்கலாம்...), “(d)தெவரம் வெஹர” (தேவராம் விகாரையில்) போன்ற பாடல்கள் அடங்கும். ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த இசை வேள்வி, அங்கு கூடியிருந்த அனைவருக்கும் மிகுந்த பயனளிப்பதாக இருந்தது. காரணம், பாடகர் அவர்கள் ஒவ்வொரு பாடலினதும் பின்னணி, அதன் கருத்து, அதன் படைப்பாளிகள் யாவர் போன்றவை பற்றிய ஒரு சிறு விளக்கத்துடன் தான் பாடல்களைப் பாடினார். இந்த இசைக் கலைஞரின் குரலில் உருவான அந்த இரம்மியமான சூழலைப் பேணும் பொருட்டு, பார்வையாளர்களும் கைதட்டி ஆரவாரிக்காமல், இசையிலேயே இலயித்திருந்த ஒர் அரிய நிகழ்வாக இது காணப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவையொட்டி, கௌரவ சபாநாயகர் அவர்கள், திரு. விக்டர் இரத்னாயக்க அவர்களுக்கும் அவரின் குழுவினருக்கும் விசேட நன்றியுரை நிகழ்த்தினார். அதே வேளை, பாராளுமன்ற பௌத்த சங்கத்தினரால் அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது. பௌத்த சமய நூல்கள் உட்பட பல நினைவுப் பரிசுப் பொருள்கள் அவரது இசைக் குழுவினருக்கும் வழங்கப்பட்டன.
கௌரவ சபாநாயகர், பாராளுமன்றச் செயலாளர் நாயகம், உயர் அதிகாரிகள், பாராளுமன்றப் பணியாளர்கள் என்போர் இந்நிகழ்வைக் காண வருகை தந்திருந்தனர். சமய வேறுபாடுகளைக் கடந்து, பல்வேறுபட்ட தரப்பினரும் கலந்து கொண்ட ஓர் ஒன்று கூடலாக இந்நிகழ்வு திகழ்ந்தது. பாராளுமன்றப் பணியாளர்களுக்கு, வேலைப் பளு மிகுந்த வரவு செலவுத் திட்ட காலத்தின் பின்னர், இது புத்துணர்வூட்டும் ஒரு நிகழ்ச்சியாக இருந்தது என்பதில் ஐயமில்லை.
இலங்கை வங்கியின் பாராளுமன்றக் கிளை இந்நிகழ்ச்சிக்கு அநுசரணை வழங்கியது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks