E   |   සි   |  

2008-03-27

"தஹம் கீ தெஹென"

"அமா தஹர" நிகழ்ச்சி முடிவடைந்து 15 மாதங்கள் ஆகிவிட்டன. நாள், 2008 மார்ச் 27ஆம் திகதியகும். மேலும் அத்தகைய இசை நிகழச்சியொன்று பாராளுமன்ற குழு அறை 1 இல் நடைபெற்றதென்பதை இத்தால் அறிவிக்கின்றேன்.

அன்று மாலை இசைவாணர் ரீ.எம். ஜயரத்னவின் “தஹம் கீ தெஹென” இசைத் தியான நிகழ்ச்சி இடம்பெற்றது. இன மத பேதமின்றி பணியாற்றொகுதி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்ட மேற்படி இசை நிகழ்ச்சியானது அனைத்து ஊழியர்களையும் தியானத்தில் ஆழ்த்தியது. இதன்போது ரீ.எம். ஜயரத்னவினால் “திலொ அக நாஹிமி” “சந்த வத்ரக்சே” “சியக ஆயு லெப” “அம்மா சந்தகி” போன்ற புத்த பகவானை போற்றும் பாடல்கள், பெற்றோர்களை புகழ்ந்து பாடும் பாடல்கள் உட்பட பல பாடல்கள் இசைக்கப்பட்டன. இதற்கு மேலாக ஒவ்வொரு பாடலும் நிர்மாணிக்கப்பட்ட முறை, பாடலை இயற்றிய விதம், இசையமைப்பு போன்றவை பற்றி திரு. ரீ.எம். ஜயரத்ன எடுத்துக்கூறிய விதம் நேயர்களது ரசனையை மேலும் வளமாக்கியது. நிகழ்ச்சியின் முடிவில் இசைக்குழு பாடலொன்றை இசைத்தனர்.

ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக கூடியிருந்தவர்களின் உள்ளங்களை தியானத்தில் ஆழ்த்திய இசைக் கலைஞர்களது இசையுடன் பாடகரின் இனிய குரல் சங்கமமானது புதியதொரு அணந்த அனுபவமாக அமைந்தது. வெறுமனே காதுக்கு இனிமை தரும் பாடலாக மட்டுமில்லாமல் அர்த்தமுள்ள பாடல்களை பாடுகின்றவர்கள் மத்தியில் தான் முதலிடம் வகிக்கின்றார் என்பதை திரு. ரீ.எம். ஜயரத்ன மிகத் தெளிவாக நிரூபித்துவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கௌரவ சபாநாயகர், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் உட்பட பாராளுமன்ற செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர் நாயகம், உயர் மட்ட உத்தியோகத்தர்கள், பணியாற்றொகுதி உறுப்பினர்கள் ஆகியோரும் மேல் மாகாண தென்பகுதிக்குப் பொறுப்பான இலங்கை வங்கி சிரேஷ்ட பிரதேச முகாமையாளரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன் கௌரவ சபாநாயகர் திரு. ரீ.எம். ஜயரத்னவை வரவேற்று விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

பாராளுமன்றப் பணியாற்றொகுதி பௌத்த சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி நிகழ்ச்சிக்கு இலங்கை வங்கி பாராளுமன்ற கிளை அனுசரனை வழங்கியது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks