E   |   සි   |  

2008-09-11

இப்தார் வைபவம் - 2008

ரமழான் மாத நோன்பை நாளாந்தம் துறப்பதற்கான மாலை உணவை அருந்தும் இப்தார் வைபவம் 2008 செப்டம்பர் 11ஆம் திகதி சபாநாயகரின் உத்தியோகபூர்வ வதிவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

மாலையில் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம அமைச்சர், அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரேபிய நாடுகளின் தூதுவர்கள், முஸ்லிம் தலைவர்கள், ஏனைய சமயப் பெரியார்கள், மற்றும் பல்வேறு ராஜதந்திரிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

வழக்கம் போன்று, மீண்டுமொரு முறை அரேபியன் றோயல் குறூப் ஒப் கம்பனீஸ் நிறுவனத்தின் தலைவர் திரு.எம்.பீ.எம்.ஹம்சா ஜே.பி. அவர்களின் அனுசரணையுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கெளரவ ரஊஃப் ஹக்கீம் அவர்களின் பாராளுமன்ற இணைப்புச் செயலாளர் திரு.எம்.ஹஸன் அல் பாஸி ஷரீப் அவர்களினால் இவ்விழா ஒழுங்குசெய்யப்பட்டது.

இவ்வாண்டு இஸ்லாமியக் கலண்டரின் ஒன்பதாவது மாதமான ரமழான், உலகெங்கும் உள்ள முஸ்லிம் விசுவாசிகளால் உன்னதமாக மதிக்கப்பட்டு பேணப்படுவதுடன் அவர்கள் அதிகாலை முதல் மாலை வரை மிகக்கண்டிப்பாக நோன்பு நோற்கின்றனர். எல்லா முஸ்லிம்களாலும் பெரிதும் மதிக்கப்படும் “ லைலத்துல் கத்ர்” இரவைக் கொண்ட மாதம் இதுவாகும். நோன்பைத் துறந்த பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தொழுகையில் ஈடுபடுகின்றனர். இந்தத் தொழுகையின்போது ஒவ்வொருவருக்காகவும், குறிப்பாக நோன்பாளிகளுக்காக அவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவனது அருளை வேண்டுவதுடன் எல்லா மனிதர்களிடையேயும் சமாதானமும் ஒற்றுமையும் நிலவ பிரார்த்திக்கின்றனர். இம்மாதத்தில் தான் முஸ்லிம்கள் மிகக்கடுமையாக தான தர்மம் செய்வதில் ஈடுபடுவதுடன் நோயாளிகளுக்கும் வறிய மக்களுக்கும் அதிஷ்டம் குன்றிய மக்களுக்கும் உதவி நல்குகின்றார்கள்.

இந்த இப்தார் வைபவம் கெளரவ சபாநாயகர் அவர்களின் தலைமையின் கீழ் மத, இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைப் போற்றிப் பேணுவதற்காக நடாத்தப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks