E   |   සි   |  

2008-12-23

தியவன்னா இனிய நத்தார் கீதங்கள் - 2008

"தியவன்னா இனிய நத்தார் கீதங்கள்" - 2008 நிகழ்ச்சி வழமையான விழாக் கோலத்துடன் டிசம்பர் மாதம் 23 ஆந் திகதி நடைபெற்றது. இம் முறை ஆராதனை நடத்தப்பட்ட முறையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கெளரவ சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்த்தலத்தின் பிரதான கட்டிடத்துக்குப் பதிலாக திறந்த வெளியில் அமைக்கப்பட்ட பிரதான மேடையொன்றில் நத்தார் திருப்பாடல் ஆராதனை இடம்பெற்றமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

ஆராதனையின் முதற் பணியாக பிரதம அதிதியாக கலந்து கொண்ட கொழும்பு அதிமேற்றாணியார் வணக்கத்துக்குரிய ஒஸ்வல்ட் கோமிஸ் அடிகளார் புனித நீர் தெளித்து சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தை ஆசிர் வாதித்தார் . அதனை அடுத்து பவணி ஆரம்பமானது. அதிமேற்றாணியார், மதகுருமார்கள், கெளவர சபாநாயகர், பீட பரிசாரகர்கள் ஆகியோர் பவணியில் அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்து வணக்கத்துக்குரிய அருட்தந்தை பெனடிக் ஜோசப் அடிகளாரின் சொற்பொழிவுடன் ஆராதனை ஆரம்பமானது. புகழ்மிக்க பாடகர் அய்வோ டெனிஸ் உட்பட குழுவினரால் அருட்தந்தை ஜாகோப் கொன்சால்ஸ்லேஸினால் எழுதப்பட்ட " ஆரம்பத்துக்கு முன்னர்" என்ற திருப்புமுனை திருப்பாடல் பாடப்பட்டதை அடுத்து புனித பைபிலின் வாசகங்கள் வாசிக்கப்பட்டன.

யேசு பாலகன் இவ்வுலகில் அவதரித்தமை பற்றிய நற்செய்தி திருப்பாடல் அருட்தந்தை சமன் மக்சிமஸ் அவர்களினால் பாடப்பட்டு மங்கள மேள முழங்கத்துடனும் நடனத்துடனும் உயிர்வகையிலான பாலன் குடில் மேடையை நோக்கி வந்தது . இது உண்மையாக சமய வைபவமொன்றில் இடம் பெற்ற ஓர் அலங்கார நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. பாலகன் குடில் மேடையை வந்தடைந்ததன் பின்னர் பிரதம அதிதியான அதிமேற்றாணியார் ஒஸ்வல்ட் கோமிஸ் அடிகளார் நத்தார் செய்தியையும் நத்தார் ஆசிர்வாதத்தையும் வழங்கினார். வழமைபோல் இவ்வருடத்திலும் இந்த விழாவுக்காக விசேட நத்தார் செய்தியொன்று வெளியிடப்பட்டது. வணக்கத்துக்குரிய அருட்தந்தை ஜோசப் பெனடிக் அடிகளாரினால் " மோசஸ் பெரேரா பிரதமகுரு" என்ற நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டது. இது வரை இந்த விழாவுக்காக மூன்று விசேட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இத்துடன் " தியவன்னா இனிய நத்தார் கீதங்கள் - 2008” நிகழ்ச்சியின் முதலாம் பாகம் முடிவடைந்ததுடன் இரண்டாம் பாகமான " நத்தார் பக்தி கீத நிகழ்ச்சி" ஆரம்பமானது.

வரையறுக்கப்பட்ட அசோசியேட்டட் நியுஸ் பேப்பர்ஸ் லிமிரெட் , இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆகிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவம் செய்த பக்திப் பாடல் குழுக்களுக்கு மேலதிகமாக வேறு பக்திப்பாடல் குழுக்களும் பக்திப்பாடல்களை இசைத்தன. முதற்தடவையாகப் பாராளுமன்ற பணியாட்தொகுதியினரின் பிள்ளைகளை உள்ளடக்கிய கீதமிசைத்தல் குழுவொன்றும் இதில் கலந்துகொண்டது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த திரு. ரஜித காமினீ விஜேசேகரவினால் இவர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர்.

இவ்வைபவத்தில் கெளரவ சபாநாயகர் , சனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ, கலாசார அலுவல்கள் அமைச்சர், மத அலுவல்கள் பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய சிறப்பு அதிதிகள் மற்றும் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாட் தொகுதியைச் சேர்ந்தோரும் கலந்து கொண்டனர்.

உண்மையான நத்தாரைக் கொண்டாடுவதற்கு முன்னராக நத்தாரின் உயிர்ப் பண்பையும் பொருளையும் அறிமுகஞ்செய்து கெளரவ சபாநாயகர் வி . ஜ. மு. லொக்குபண்டார அவர்களின் அழைப்பின் பேரில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சிறப்பு நிகழ்வு வளர்ச்சியடைந்துள்ள விதம் மிகவும் பாராட்டத்தக்கதாகும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks