பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2009-05-08
முவ்வாசிபெற்ற வெசக் தினத்தை கொண்டாடுவதற்காக கௌரவ சபாநாயகரது உத்தியோகபூர்வ இல்லத்திலும் பாராளுமன்ற வளாகத்திலும் நடத்தப்படும் வருடாந்த நிகழ்வாகிய "தியவன்னாவே வெசக் உதானய" இவ்வருடமும் நடத்தப்பட்டது. கொள்கைகளுக்கு முக்கியத்துவமளித்து நடாத்தப்பெற்ற இந் நிகழ்ச்சிகளில் (ப்ரத்திபத்தி பூஜா) பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பக்தர்களுக்கான, 'சில்' அனுஷ்டானமும் காலை புத்த பூஜையும் மயுரபாத பிரிவினாவின் பிரதமகுரு வண. பண்டித செனரத்புர தம்மா லங்கார தேரர் அவர்களால் நடத்தப்பட்டது. அதன் பின்னர், பாராளுமன்ற பணியாள் தொகுதி பௌத்த சங்கத்தினால் பக்தர்களுக்கு காலை தானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்கமா பண்டித வண. கொட்டுகொட தம்மவன்ச தேரரினால் தம்ம போதனை நிகழ்த்தப்பட்டது. அது மனதின் தன்மை பற்றி போதிக்கும் ஒரு தம்ம பத சுலோகத்தை அடிப்படையாகக் கொண்டமைந்திருந்தது. அதன் பின்னர், வண. ராஜகீய பண்டித கரவில் கொட்டுவே தம்மாதிலக்க தேரரினால் தியானமும் பௌத்த பூஜையும் நடாத்தப்பட்டன. வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திரு. ரோஹித்த போகொல்லாகமவின் அனுசரணையோடு கோட்டே மாநகர சபையினால் பக்தர்களுக்கு பகல் தானம் வழங்கப்பட்டது. பகல் தானம் வழங்கலின் பின்னர் வண. கரவில கொட்டுவே தம்மாதிலக்க தேரரினால் தம்ம பதம் ஓதுதல் நடத்தப்பட்டது. அதில், யமக்க வக்கவிலிருந்து சில சுலோகங்களின் பொருள் விளக்கப்பட்டது.
அதன் பின்னர், பல்கலைக்கழக மாணவர்கள் 'அற விழுமியங்கள்' எனும் தலைப்பிலான செயலமர்வில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்ற வளாகத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு அவர்கள் தியான நிகழ்ச்சிகள், தம்ம கலந்துரையாடல்கள், உரைகள் முதலியவற்றில் பங்குபற்றினர். அதனிடையே, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தக சேவையின் போயா தின நிகழ்ச்சியான 'தினுவானம் தெலொவம தினுவாமய்' எனும் நிகழ்ச்சி சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒலிபரப்பப்பட்டது. அடுத்து ஆரம்பித்தது 'தொரமண்டலாவ' தம்ம கலந்துரையால் நிகழ்ச்சியாகும். அந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட கற்றறிந்தோர் குழுவில் வண. தேவாலேகம மேதானந்த தேரர், பேராசிரியர் சுமணபால கல்மங்கொட, மற்றும் கௌரவ சபாநாயகர் ஆகியோர் இடம் பெற்றனர். இதில் பக்தர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டு மறுநாள் சுயாதீன தொலைக்காட்சி வலைப்பின்னலில் ஒளிபரப்பப்பட்டது.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திலுள்ள போதிவிருட்சத்தின் முன்னே மாலை கிலன்பாச பௌத்த பூஜையை நிறைவு செய்த பின்னர் பக்தர்கள் 'சக்மன் பாவனவில்' 'பட்டான'வை உச்சரித்த வண்ணம் பாராளுமன்ற வளாகத்திலுள்ள போதி விருட்சத்தை வந்தடைந்தனர். அதன் பின்னர், வண. கரவில கொட்டுவே தம்மதிலக்க தேரரினால் சில் அனுஷ்டானமும் போதி பூஜையும் நிறைவு செய்யப்பட்டன.
இவ்வாறு, 2009 ஆம் ஆண்டு "தியவன்னாவே வெசக் உதானய" நிறைவுபெற்றது. இந்நிகழ்ச்சியை மிக உன்னதமான முறையில் ஒழுங்கு செய்வதில் பல்வேறு அரச நிறுவனங்களினாலும், தனி மனிதர்களாலும், அமைப்புகளினாலும் வழங்கப்பட்ட ஆதரவும் வழிகாட்டலும் இங்கு சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவையாகும்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks