பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கீழுள்ள பாவனைக்குப் பொருத்தமற்ற பொருட்களை பாராளுமன்ற வளாகத்திலிருந்து கழித்தொதுக்க பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தால் விலைகள் கோரப்பட்டுள்ளன.
| உருப்படி இலக்கம் | விபரம் |
| 1. | பாவனையிலிருந்து அகற்றப்பட்ட தடையற்ற மின்சார விநியோக அலகுகள் (UPS-12V/7 AH) பற்றரிகள் – 172 |
| 2. | பாவனையிலிருந்து அகற்றப்பட்ட தடையற்ற மின்சார விநியோக அலகுகள் (UPS-12V/7 AH) – 52 |
| 3. | பாவனையிலிருந்து அகற்றப்பட்ட சமையல் அறைப் பொருட்கள், வயர்கள் மற்றும் கழித்தொதுக்கப்பட்ட வாகன இரும்புப் பாகங்கள் |
| 4. | பாவனையிலிருந்து அகற்றப்பட்ட மடிக் கணினிகள் 02, வில்லைக் கணினி 01, மேசைக் கணினிகள் 27, திரையகங்கள் (மொனிட்டர்கள்) 35 உட்பட கணினி உதிரிப்பாகங்கள் |
| 5. | பாவனையிலிருந்து அகற்றப்பட்ட கணினி அச்சு இயந்திரங்கள் 22, நிழற்படப் பிரதி இயந்திரங்கள் 12, தொலை நகல் இயந்திரங்கள் 07, கையடக்கத் தொலைபேசிகள் 05 உட்பட அலுவலக உபகரணங்கள், ஒருதொகுதி மின் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் |
| 6. | உடைந்த காரணத்தால் பாவனையிலிருந்து அகற்றப்பட்ட ஒருதொகுதி மரத் தளபாடங்கள் (மரத் துண்டு பாகங்கள், பொலிமர் மற்றும் இரும்பு) |
| 7. | பாவனையிலிருந்து அகற்றப்பட்ட தொலைக்காட்சி இயந்திரங்கள் 10, ஒலிப்பதிவு இயந்திரங்கள் உட்பட ஒருதொகுதி மின் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் |
| 8. | பாவனையிலிருந்து அகற்றப்பட்ட பம்பி இயந்திரங்கள் 03, பூந்தோட்டப் பராமரிப்பு உபகரணங்கள் மற்றும் சமையல் அறை உபகரணத் தொகுதி |
| 9. | சமையல் அறையிலிருந்து அப்புறப்படுத்தும் தும்புடனான தேங்காய்ச் சிரட்டைகள், வெற்றுப் பிளாஸ்ரிக் கேன்கள் (மூடியுள்ள / மூடியற்ற), பழுதான வெற்றுப் பிளாஸ்ரிக் கேன்கள், வெற்று பூச்சுக் கேன்கள் (04 லீட்டர்), பூச்சு வாளிகள் மற்றும் செய்தித் தாள்கள் |
2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆந் திகதி மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 3.00 மணி வரையும், ஆகஸ்ட் மாதம் 13ஆந் திகதி மு.ப 9.00 தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையும் மேற்படி உருப்படிகளை பாராளுமன்ற வளாகத்தில் சோதனையிட முடியும் என்பதுடன், பாராளுமன்றத்தின் காசாளர் கருமபீடத்தில் 1000.00 ரூபாவைக் கட்டணமாகச் செலுத்தி, பெற்றுக் கொண்ட பற்றுச்சீட்டை வழங்கல் மற்றும் சேவை அலுவலகத்தில் சமர்ப்பித்து விலை கேட்புக்கான அழைப்புப் படிவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேற்படி உருப்படி இலக்கம் 1 தொடக்கம் 9 வரை குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பாவனைக்குப் பொருத்தமற்ற பொருள் வகைக்காகவும் வெவ்வேறாகப் பூர்த்திச் செய்த கேள்வி அழைப்புப் படிவத்தை, மீளச் செலுத்தப்படும் ரூ.10,000/- வைப்புத் தொகைக்கான பாராளுமன்றப் பற்றுச் சீட்டுடன் கடித உறையில் இட்டு, அதன் இடதுபக்க மேல் மூலையில் “பாவனைக்குப் பொருத்தமற்ற பொருள் விற்பனைக்கான விலைகோரல்” எனக் குறிப்பிட்டு இலச்சினையிட்டு, பாராளுமன்ற வழங்கல் மற்றும் சேவைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ள கேள்விப் பெட்டியில் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆந் திகதி பி.ப. 1.00 மணிக்கு முன்னர் இடவேண்டும். குறித்த நேரத்தின் பின்னர் சமர்ப்பிக்கப்படும் விலை கேட்புக்கான அழைப்புப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.
2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆந் திகதி பி.ப 1.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள வாகன முற்றத்தில் கேள்வி விண்ணப்பங்கள் திறக்கப்படுவதோடு, விண்ணப்பதாரர்கள் அல்லது அவர்களது அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் அந்நிகழ்வில் பங்குபற்ற முடியும். தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆந் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் தமது உருப்படிகளுக்கான பணத்தை பாராளுமன்றத்தின் காசாளர் கருமபீடத்தில் செலுத்திய பின்னர் வழங்கப்படும் பற்றுச்சீட்டை சமர்ப்பித்து உரிய உருப்படிகளை பாராளுமன்ற வளாகத்திலிருந்து அகற்றிக்கொள்ள வேண்டும். பாவனையிலிருந்து அகற்றப்படவுள்ள அனைத்து பொருட்களையும் அல்லது அதன் ஒரு தொகுதியை முன்னறிவித்தலின்றி தடுத்து வைக்கும் உரிமை பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்குரியதாகும்.
தலைவர்,
பாவனைக்குப் பொருத்தமற்ற பொருட்களை
கழித்தொதுக்குவதற்கான பெறுகைக் குழு,
இலங்கைப் பாராளுமன்றம்,
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே.
2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02ஆந் திகதி
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks