04

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0485/2018: Cinemas

1751/ '17

கௌரவ லக்கி ஜயவர்தன,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) நாடு முழுவதிலும் தற்போது நடாத்தப்பட்டு வருகின்ற சினிமாக் கொட்டகைகள் யாவை;

(ii) அவை அமைந்துள்ள இடங்கள் வெவ்வேறாக யாவை;

(iii) இச்சினிமா கொட்டகைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவை ஆரம்பிக்கப்பட்டுள்ள திகதிகள் வெவ்வேறாக யாவை;

என்பதை அவர் சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) நாடு முழுவதிலும் அமைந்துள்ள சினிமாக் கொட்டகைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளனவா;

(ii) ஆமெனில், அது எவ்வாறு;

(iii) இச்சினிமா கொட்டகைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது யார்;

(iv) மிகக்குறைந்த வசதிகளுடனும் பலவீனமான செயற்பாட்டுடனும் கூடியதாக நடாத்தப்பட்டு வரும் சினிமாக் கொட்டகைகள் காணப்படுகின்றன என்பதை அறிவாரா;

(v) ஆமெனில், சினிமாக் கொட்டகைகளை முறைசார்ந்ததாக நடாத்திச் செல்வதற்காக, சினிமாக் கொட்டகைகளை ஒழுங்குமுறைப் படுத்தப்படுவதற்கு முறைசார்ந்த முறையியலொன்றை துரிதமாக அமைப்பாரா;

(vi) ஆமெனில் , அது எவ்வாறு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-18

கேட்டவர்

கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks