02

E   |   සි   |  

 திகதி: 2018-07-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0454/2018: Google Loon Project

1697/ '17

கௌரவ பிமல் ரத்நாயக்க,— தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்த "கூகல் லூன்" கருத்திட்டம் தொடர்பில் கூகல் நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை அல்லது இணக்கப்பாட்டு ஆவணமொன்று உள்ளதா என்பதையும்;

(ii) இதற்காக கூகல் நிறுவனத்தை தெரிவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்ததன் அடிப்படை யாதென்பதையும்;

(iii) இக்கருத்திட்டத்திற்கென இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொடுப்பதற்கு இணங்கிய மற்றும் பெற்றுக்கொடுத்த வசதிகள் யாவை என்பதையும்;

(iv) மேற்படி கருத்திட்டத்திற்காக இலங்கை அரசாங்கத்திற்கு செலவான பணத் தொகை எவ்வளவென்பதையும்;

(v) கூகல் நிறுவனம் ஆகாயத்துக்கு ஏவிய பலூன் கீழே வீழ்ந்தமைக்கான காரணம் என்னவென்பதையும்;

(vi) இது பற்றி விசாரணை நடத்தப்பட்டு அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(vii) கூகல் நிறுவனம் இக்கருத்திட்டத்தை கைவிட்டதாக அறிவித்துள்ளதா என்பதையும்;

(viii) ஆமெனின், குறித்த உடன்படிக்கை மற்றும் இணக்கப்பாடு முறிந்தமையால் ஏற்பட்ட நிதி ரீதியான மற்றும் ஏனைய சேதங்கள் யாவை என்பதையும்;

(ix) மேற்படி சேதங்களுக்காக பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் யாவர் என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-17

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks