04

E   |   සි   |  

 திகதி: 2018-06-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0423/2018: developing drainage system in Kalawewa village

423/ '18

கௌரவ இஷாக் ரஹுமான்,— மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (​i) இப்பலோகம பிரதேச செயலாளர் பிரிவில், கலாவெவ கிராமத்தில் சுமார் 2500 குடும்பங்கள் வசிக்கின்றார்கள் என்பதையும்;

(ii) இக் கிராமம், மாவட்டத்தில் சன நெரிசல் மிக்க துரிதமாக நகரமயமாகிக்கொண்டிருக்கும் ஒரு கிராமம் என்பதால் இதன் கிளை வீதிகள் மற்றும் வடிகால் தொகுதிகளை முறையாக அமைக்க வேண்டியது இன்றியமையாதது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இக் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நிதி ஏற்பாட்டை வழங்குவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-08

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks