04

E   |   සි   |  

 திகதி: 2018-06-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0422/2018: Distributing paddy lands leased out to Kurunegala Plantation Limited from Mahaakkarawatta and Kelaniwatta on free hold basis for long term tenant farmers

422/ '18

கௌரவ இஷாக் ரஹுமான்,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தாத்துசேனபுர, கலாவெவ, மஹஅக்கரய வத்த மற்றும் களணிவத்த ஆகிய பிரதேசங்களில் ஏறத்தாழ 100 ஏக்கர் வயற் காணி குருநாகல் பெருந்தோட்ட கம்பனிக்கு குத்தகைக்கு விடப்படப்பட்டுள்ளதென்பதையும்;

(ii) மேற்படி காணியில் குத்தகை விவசாயிகளாக, விவசாயிகள் நீண்டகாமாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றமையால், பெருந்தோட்ட கம்பனியிலிருந்து இக்காணிகளை விடுவித்து வாரக்குடி விவசாயிகளுக்கு அறுதியுறுதி உரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இப்பலோகம பிரதேச செயலாளருக்கும் காணி அமைச்சுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி காணிகளின் அறுதியுறுதி உரிமையை இவ்விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

(ii) ஆமெனின், அத்திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-07

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks