பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
391/ '18
கெளரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு;
(ii) மேற்படி பாடசாலைகளில் ஆரம்பநிலை மற்றும் இரண்டாம் நிலை பாடசாலைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;
(iii) மேற்படி பாடசாலைகளில் மத்திய அரசுக்குரிய பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு;
(iv) அந்த பாடசாலைகளின் பெயர்கள் யாவை;
(v) தமிழ் மொழிமூலம் கல்வி கற்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இரத்தினபுரி மாவட்டத்தில்,
(i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;
(ii) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை க.பொ.த.(சாதாரண தர) மற்றும் க.பொ.த (உயர் தர) பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை வெவ்வெறாக எவ்வளவு;
(iii) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை பொறியியல் மற்றும் மருத்துவ துறையில் கற்பதற்கு பல்கலைக்கழகங்களுக்கான தகைமைகளைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு;
(iv) சிங்கள மொழிமூல மற்றும் தமிழ் மொழிமூல மாணவர்களுக்கிடையே மேற்காண் பரீட்சைகளில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை சதவீதமாக எவ்வளவு;
என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-07
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks