பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2018-06-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0238/2018: Ratnapura city- dispute with a temple over lands for business premises

238/18

கௌரவ ஹேஷான் விதானகே,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் துரிதமாக அபிவிருத்தி அடைந்துவரும் எம்பிலிப்பிட்டிய நகரத்தில் வர்த்தகக் காணிகளுக்கு உரித்துகளை வழங்குவதில் பிரச்சினை நிலவுகின்றது என்பதை ஏற்றுக்கொள்வாரா;

(ii) ஆமெனில், சரியான முறையில் காணி உரித்துகளை வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இந்நகரத்தில் காணிகள் தொடர்பில் விஹாரையொன்று உரிமை கோருவதனால், வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களில் கட்டிடங்களை நிர்மாணிப்பதில்லை என்பதை அறிவாரா;

(ii) இவ்விஹாரைக்கு குறிப்பிட்ட காணிகள் தொடர்பில் உண்மையிலேயே இருக்கின்ற உரித்து யாது;

(iii) பல வருட காலமாக இந்நகரத்தில் குறிப்பிட்ட வர்த்தக நிலையங்களின் ஆட்சியை அனுபவித்து வருகின்ற வர்த்தகர்களுக்கு அவற்றின் உரித்தை வழங்குவதற்கும், தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வர்த்தக சமூகத்தினருக்கு வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வாரா;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-05

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks