பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1690/ '17
கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2000.05.05 ஆம் திகதிய 1130/22 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபந்தனைகளுடனான உலக மரபுரிமை அந்தஸ்து நக்கல்ஸ் மலைத்தொடருக்கு கிடைத்ததென்பதையும்;
(ii) குறிப்பிட்ட நிபந்தனைகளிலுள்ள பிரதான நிபந்தனையின்படி, நக்கல்ஸ் மலைத்தொடருக்கு மிக அண்மையில் அமைந்துள்ள மினிப்பே, பன்வில, பாத்ததும்பர, லக்கல, வில்கமுவ, ரத்தொட்ட, உக்குவெல மற்றும் மாத்தளை ஆகிய 8 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குரிய 2000 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி குறிப்பிட்ட மலைத்தொடருடன் ஒன்றிணைக்கப்படவில்லை என்பதையும்;
(iii) எனவே, நக்கல்ஸ் மலைத்தொடர் உலக மரபுரிமை அந்தஸ்திலிருந்து நீக்கப்படும் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) நக்கல்ஸ் மலைத்தொடர் உலக மரபுரிமை அந்தஸ்திலிருந்து நீக்கப்படுவதை தவிர்ப்பதற்காக மேலே குறிப்பட்ட 2000 ஏக்கர் நிலப்பரப்பை நக்கல்ஸ் மலைத்தொடருடன் ஒன்றிணைக்க நடவடிக்கை மேற்கொள்வாரா;
(ii) ஆமெனில், அதன் தற்போதைய நிலைமை யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-19
கேட்டவர்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks