02

E   |   සි   |  

 திகதி: 2018-07-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0221/2018: Archaeological cemetery in Mamadu

221/ '18

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வவுனியா, மாமடு, அக்போவில் பிரதேசத்தில் புராதன மயானம் ஒன்று அமையப் பெற்றுள்ளது என்பதையும்;

(ii) மேற்படி மயானம் தொல்பொருளியல் திணைக்களத்தினால் அடையாளமிடப் பட்டுள்ளது என்பதையும்;

(iii) அண்மையில் அப்பிரதேசத்தில் தேக்கு மரங்கள் தறிக்கப்பட்ட சம்பவமொன்று காரணமாக மேற்படி மயானத்திற்கும் அதில் அமைந்துள்ள தொல்பொருள்களுக்கும் சேதமேற்பட்டு அழிவடைந்துள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி மயானத்தில் தொல்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அதற்கு பொறுப்புக்கூறவேண்டிய ஆட்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) எதிர்காலத்தில் மேற்படி தொல்பொருட்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-17

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks