E   |   සි   |  

 திகதி: 2018-06-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0157/2018: Students qualified for university and those qualified to study medicine of the students who sat for A/L 2015 from Biology stream - Puttlam and Kurunegala districts

157/ '18

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டில் க.பொ.த. (உயர் தர) பரீட்சைக்கு உயிரியல் பாடத் துறையில் புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களிலிருந்து தோற்றியுள்ள மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி எண்ணிக்கையில், பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமையை பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் சதவீதமும் எவ்வளவென்பதையும்;

(iii) மருத்துவ பீடத்திற்கான தகைமையை பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் சதவீதமும் எவ்வளவென்பதையும்;

(iv) மருத்துவ பீடத்திற்கான தகைமையை பெற்றுள்ள மாணவன் அல்லது மாணவியின் ஆகக்குறைந்த பெறுபேறு, Z பெறுமதி, கல்வி கற்ற பாடசாலை மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மருத்துவ பீடம் யாதென்பதையும்;

ஒவ்வொரு மாவட்டத்தின்படி தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-07

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks