04

E   |   සි   |  

 திகதி: 2018-06-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0039/2018: Proposals 204- Budget 2016

39/'18

கௌரவ பந்துல குணவர்தன,— பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டத்தின் 204 ஆம் இலக்க பிரேரணைக்கு அமைவாக, தார் இற்கான சந்தை வாய்ப்புகள் தளர்த்தப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்காக பின்பற்றப்பட்ட வழிமுறைகள் யாவையென்பதையும்;

(iii) மேற்படி வரவு செலவுதிட்ட பிரேரணைக்கேற்ப தார் சந்தையில் பிரவேசித்த பிரதானமான வழங்குனர்கள் யாவரென்பதையும்;

(iv) 2003 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தார் உற்பத்தி மற்றும் ஒவ்வொரு வருட இறுதியிலும் நிலவிய கையிருப்பின் அளவு யாவையென்பதையும்;

(v) 2009 முதல் 2016 ஆம் ஆண்டு வரை உலக சந்தையில் தார் விலை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தார் விலை வருடாந்த ரீதியில் வெவ்வேறாக யாதென்பதையும்;

(vi) 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை இலங்கையின் தார் தேவைப்பாடு பற்றிய எதிர்வுகூறல் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-20

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks