04

E   |   සි   |  

 திகதி: 2018-06-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0038/2018: Proposals 182- Budget 2016

38/'18

​கௌரவ பந்துல குணவர்தன,— ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் 182 ஆம் இலக்க பிரேரணைக்கமைவாக, ஆரம்பக் கைத்தொழில் பேரவையொன்று (Primary Industry Council) தாபிக்கப்பட்டதா என்பதையும்;

(ii) ஆமெனில், அத்தேதி மற்றும் இடம் யாதென்பதையும்;

(iii) மேற்படி வரவுசெலவுதிட்டப் பிரேரணையிலுள்ள ஆரம்பக் கைத்தொழில் பேரவையொன்றை தாபிப்பதன் நோக்கம் மற்றும் அதற்கான வேலைத்திட்டத்தைப் பற்றி சுருக்கமாக தெளிபடுத்துவாரா என்பதையும்;

(iv) இந்த பேரவையுடன் தொடர்புடைய நிபுணர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(v) மேற்படி பிரேரணையில் குறிப்பிடப்படுகின்ற இலங்கையில் தற்போது இயங்கும் நிலையிலுள்ள ஆரம்பக் கைத்தொழில்கள் பற்றிய பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(vi) 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பக் கைத்தொழில்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-19

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks