04

E   |   සි   |  

 திகதி: 2018-06-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0036/2018: Proposals 169- Budget 2016

36/ '18

கௌரவ பந்துல குணவர்தன,— ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 வரவு செலவு திட்டத்தின் 169 ஆம் இலக்க முன்மொழிவின் பிரகாரம், கறுவா மற்றும் அது சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூபா 5 மில்லியன் நிதி ஏற்பாடு செலவிடப்பட்ட விதம் பற்றிய செலவின விபரமொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(ii) மேற்படி வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் பிரகாரம், 2016 ஆண்டில் அரசாங்க நிதி ஏற்பாட்டை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை, மேற்படி ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் மற்றும் இவற்றின் பெறுபேறுகள் பற்றிய அறிக்கையை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(iii) வாசனைத் திரவியங்கள் (மிளகு, கராம்பு மற்றும் சாதிக்காய்) ஏற்றுமதிக்கான செஸ் வரி நீக்கப்பட்டமையால் 2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட செஸ் வரி வருமான இழப்பின் அளவு எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-07

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks