04

E   |   සි   |  

 திகதி: 2018-06-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0009/2018: Archaeological places threatened due to Tank being built in Holombuwa area

9/ '18

கௌரவ கனக ஹேரத்,— நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கலிகமுவ தேர்தல் தொகுதியில், ஹொலொம்புவ பிரதேசத்தில் நீர்த்தேக்கமொன்று அமைக்கப்படுகின்றதா;

(ii) மேற்படி நீர்த்தேக்கத்தில் மூழ்கின்ற தொல்பொருளியல் பெறுமதியுடைய தெதிகம கொட்டவெஹர, ஸ்திரீபுர கற்குகை விகாரை உள்ளிட்ட புராதன விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களின் எண்ணிக்கை யாது;

(iii) மேற்படி நீர்த்தேக்கத்தில் மூழ்கின்ற கலிகமுவ மற்றும் தெதிகம தேர்தல் தொகுதிகளிலுள்ள கிராமங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவை;

(iv) குறித்த கிராமங்களில் காணிகளை இழக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை யாது;

(v) ஹொலம்புவையிலிருந்து சுரங்கப் பாதையின் வழியாக மா ஓயாவுக்கு நீரைக் கொண்டு செல்லும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றதா;

(vi) எந்தவொரு இயற்கை அனர்த்தத்திற்கும் உள்ளாகாத, சகல துறைகளிலும் பெறுமதியுடைய இத்தகைய ஒரு பிரதேசத்தில் நீர்த்தேக்கமொன்றை அமைப்பதன் மூலம் அப்பிரதேசத்தின் மக்களுக்கு பாரிய சேதம் ஏற்படுமென்பதை ஏற்றுக்கொள்வாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-05

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks