04

E   |   සි   |  

 திகதி: 2018-08-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0008/2018: Jailer Vacancies

கௌரவ கனக ஹேரத்,— நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையின் சிறைச்சாலைகள் திணைக்களத்தில் சேவையாற்றுகின்ற மொத்தப் பதவியணி எவ்வளவு;

(ii) அதன் தரம் ஒன்றைச் சேர்ந்த ஜேலர்களின் எண்ணிக்கை எவ்வளவு;

(iii) தரம் இரண்டைச் சேர்ந்த ஜேலர்களின் எண்ணிக்கை எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 2015 ஆம் ஆண்டிலிருந்து சிறைச்சாலைகள் திணைக்களத்தில் நிலவுகின்ற தரம் ஒன்றைச் சேர்ந்த ஜேலர் பதவிகளில் நிலவுகின்ற வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு;

(ii) மேற்படி வெற்றிடங்கள் நிலவும் பதிவிகளுக்கான தகைமைகளைப் பெற்ற தரம் இரண்டைச் சேர்ந்த ஜேலர்களின் எண்ணிக்கை எவ்வளவு;

(iii) மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்காக கருத்திற் கொள்ளப்படுகின்ற மூலப்பிரமாணங்கள் யாவை;

(iv) எதிர்காலத்தில் இந்த வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பாரா;

(v) ஆமெனில் அத்திகதி யாது;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-23

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks