04

E   |   සි   |  

 திகதி: 2018-08-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0007/2018: Jobs for unemployment graduates

7/ '18

கௌரவ கனக ஹேரத்,— அரச நிருவாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் இன்றளவில் பெருந்தொகையான பட்டதாரிகள் தொழில்களை எதிர்பார்த்துள்ளனரென்பதை அவர் அறிவாரா;

(ii) இலங்கையில் இன்றளவில் தொழில்களை எதிர்பார்த்துள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கை எவ்வளவு;

(iii) அவ்வாறெனில் அவர்களுக்கு தொழில்களை வழங்குவதற்காக ஏதேனும் வேலைத்திட்டமொன்று அரசாங்கத்தினால் வகுக்கப்பட்டுள்ளதா;

(iv) தொழிலற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் அரசாங்கத்தினால் தொழில்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா;

(v) இன்றேல், அரசாங்கத்தினால் தொழில்வழங்க எதிர்பார்த்துள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கை எவ்வளவு;

(vi) இந்த தெரிவுகள் எத்தகைய மூலப்பிரமாணத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) நாட்டில் பற்றியெரிகின்ற ஒரு பிரச்சினையான இதற்காக அரசாங்கத்தினால் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கழியும் காலம் எவ்வளவென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-07

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks