01

E   |   සි   |  

 திகதி: 2010-10-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0542/2010: Karativ Hospital in Ampara

0542/ ‘10 3. கெளரவ எம்.ரி. ஹசன் அலி,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,— (2) (அ) (i) கடந்த தினம் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு வைத்தியாசலைக்குச் சொந்தமான நோயாளர் வண்டி இனம் தெரியாதோரால் தீ வைத்து அழிக்கப்பட்டது என்பதையும், (ii) இதனால் மேற்படி வைத்தியசாலையின் கடுமையான நோயாளிகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மாரை அவசர சிகிச்சைகளுக்காக வேறொரு வைத்தியசாலைக்கு கொண்டு போவதில் அசெளகரியங்கள் காணப்படுகின்றன என்பதையும் அவர் அறிவாரா? (ஆ) காரைதீவு வைத்தியசாலைக்கு நோயாளர் வண்டியொன்றினை வழங்குவதில் உள்ள தேவைப்பாடு குறித்து அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ள போதிலும், இதுவரை மேற்படி வைத்தியசாலைக்கு நோயாளர் வண்டியினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா? (இ) அவ்வாறாயின், மேற்படி வைத்தியசாலைக்கு தாமதமின்றி நோயாளர் வண்டி ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா? (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-10-19

கேட்டவர்

கௌரவ கௌரவ எம்.ரி. ஹஸன் அலி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks