04

E   |   සි   |  

 திகதி: 2010-10-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0504/2010: Drinking Water Projects in Narammala

0504/ ‘10

கெளரவ சாந்த பண்டார,— நீர் வழங்கல்,  வடிகாலமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல பிரதேச செயலாளர் பிரிவினுள் குடிநீர் வசதி பூர்த்தி செய்யப்பட வேண்டிய அநேக பிரதேசங்கள் உள்ளன என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ)    மேற்படி குடிநீர் வசதியினைப் பூர்த்தி செய்யும் முகமாக இற்றைவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) தம்பதெனியா பிரதேசத்தில் விசேட நீர்க் கருத்திட்டமொன்று ஆரம்பிக்கப் பட்டுள்ளதென்பதையும்,

(ii) மேற்படி கருத்திட்டத்தின் முதலாவது கட்டம் மட்டும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்பதையும்,

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஈ) அதன் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(உ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-10-07

கேட்டவர்

கௌரவ சாந்த பண்டார, பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல், வடிகாலமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks