பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0492/ ’10
கெளரவ ஆர்.எம். ரஞ்சித் மத்தும பண்டார,— நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையின் சனத்தொகையில் குடிநீர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளவர்களின் சதவீதம் யாதென்பதையும்,
(ii) மொனறாகலை மாவட்ட மக்களில் குடிநீர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளவர்களின் சதவீதம் யாதென்பதையும்,
(iii) மொனறாகலை மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை மாவட்ட மக்களில் குடிநீர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளவர்களின் சதவீதம் யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) தற்போது நீர் வசதிகள் வழங்கப்பட்டுள்ள சில பிரதேசங்களைச்சேர்ந்த மக்களுக்கு வறட்சிக் காலத்தில் நீர் கிடைப்பதில்லை என்பதையும்,
(ii) குடி நீர் வசதி வழங்கப்படாதுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த வறிய மக்கள் சடுதியாக நோய்வாய்ப்படுகின்றனர் என்பதையும்,
(iii) கடந்த காலத்தில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மொனறாகலை மாவட்டத்தில் விசேட நீர்க் கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(இ) ஆமெனில், மொனறாகலை மாவட்டத்தில் தற்போது நீர் வசதிகள் இல்லாத பிரதேசங்களுக்கு நீர் வழங்குவதற்காக முறையான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்தா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-10-08
கேட்டவர்
கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.
அமைச்சு
நீர் வழங்கல், வடிகாலமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks