பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2018-03-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

2323/2018: Dambulla International Cricket Stadium

2323/ '17

கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தம்புள்ள சர்வதேச கிரிக்கெற் விளையாட்டரங்கு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட திகதி யாது;

(ii) மேற்படி விளையாட்டரங்கினை நிர்மாணிப்பதற்காக செலவிட்ட மொத்தப் பணத்தொகை யாது;

(iii) மேற்படி பணத்தொகை எத்தகைய மூலங்களிலிருந்து பெறப்பட்டன;

(iv) விளையரட்டரங்கு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட திகதியில் இருந்து இற்றைவரை மேற்படி விளையாட்டரங்கில் நடைபெற்ற டெஸ்ற் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 – 20 போட்டிகளின் எண்ணிக்கை யாது;

(v) மேற்படி போட்டிகளிலிருந்து ஈட்டிய வருமானம் எவ்வளவு;

(vi) அங்கு சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் மேற்படி ஊழியர்களில் நேரடியாக இலங்கை கிரிக்கெற் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் மாவட்ட கிரிக்கெற் கழகத்தைச் சேர்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;

(vii) மேற்படி ஊழியர்கள் அனைவரையும் இலங்கை கிரிக்கெற் நிறுவனத்துடன் இணைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-03-21

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks