01

E   |   සි   |  

 திகதி: 2010-10-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0443/2010: Samurdhi

0443/ ‘10

கெளரவ எம்.ரி. ஹசன் அலி,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    காலி, கனம்பிட்டி வீதி, ஜெமில் மாவத்தையில், 97/46 பி இலக்க வீட்டில் வசிக்கும் திரு. எம்.எவ்.எம்.கபூர் மற்றும் இவரது குடும்ப அங்கத்தவர்களின் வருமானத்தை மிகை மதிப்புக்கு உட்படுத்தி பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரினால் விடயங்கள் முன்வைக்கப்பட்டதனால் கடந்த காலத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சமுர்த்தி நிவாரண கொடுப்பனவு இரத்துச் செய்யப்பட்டதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) வாழ்வதற்கு நிரந்தர வருமான வழி இன்றி, வறுமையில் வாடும், நோயால் பீடிக்கப்பட்ட பிள்ளை உள்ளிட்ட திரு. கபூரின் குடும்ப அங்கத்தவர்களுக்கு சமுர்த்தி நிவாரண கொடுப்பனவு இதுவரை வழங்கப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்,

(ii) திரு. கபூர் மற்றும் இவரது குடும்ப அங்கத்தவர்களுக்கு உடனடியாக சமுர்த்தி நிவாரண கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-10-08

கேட்டவர்

கௌரவ கௌரவ எம்.ரி. ஹஸன் அலி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks