01

E   |   සි   |  

 திகதி: 2010-10-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0420/2010: Stores - 175 C- Vauxhall Street

0420/ ’10

கெளரவ ருவன் ரணதுங்க,— அரச வளங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான வொக் ஷோல் வீதி, இலக்கம் 175 சீ, தொகுதியில் அமைந்துள்ள 4536 சதுர அடிகள் கொண்ட களஞ்சிய சாலை, கொழும்பு 03, ஆர். ஏ. டி மெல் மாவத்தை, 345 ஆம் இலக்க முகவரியில் அமைந்துள்ள குலோபல் தே பேக்ஸ் கம்பனிக்கு ரூபா 58,968.00 மாதாந்த வாடகைக்கு குத்தகையில் விடப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) சம்பந்தப்பட்ட குத்தகை உடன்படிக்கைக்கு அரசின் விலை மதிப்பீட்டு அறிக்கையும், அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளதா என்பதையும்,

(ii) சம்பந்தப்பட்ட குத்தகையாளர்கள் குத்தகை உடன்படிக்கைக்கு அமைவாக சட்டபூர்வமாக நடந்துகொண்டுள்ளனரா என்பதையும்,

(iii) அவ்வாறின்றேல், அதற்கெதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்,

(iv) குத்தகையாளர் சட்டபூர்வமாக நடந்துகொண்டிருக்காவிடின், மேற்படி களஞ்சிய சாலையை மீண்டும் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்.

(v) அவ்வாறு சட்டபூர்வமாக நடந்துகொண்டிருக்காவிடின், அது தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யாரென்பதையும்:

(vi) அவர்கள் தொடா்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-10-07

கேட்டவர்

கௌரவ கெளரவ ருவன் ரணதுங்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks