04

E   |   සි   |  

 திகதி: 2017-06-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

1599/2017: நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம்:சுற்றாடல் மாசடைவு

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் காரணமாக மிகவும் பாரதூரமான வகையில் சுற்றாடல் மாசடைவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதை அறிவாரா என்பதையும்;

(ii) நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படும் பாதகமான வாயுக்களின் வெளியேற்றத்தை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை யாது என்பதையும்;

(iii)நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பலை முகாமைத்துவம் செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை யாது என்பதையும்;

(iv) நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் சுற்றாடல் மாசடைதலைக் குறைப்பதற்காக இலங்கை மின்சார சபையினால் எதிர்காலத்தில் எவ்வளவு பணம் முதலீடு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது என்பதையும்;

அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

(ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-22

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-06-22

பதில் அளித்தார்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks