01

E   |   සි   |  

 திகதி: 2017-07-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1576/2017: கிளிநொச்சி ஆஸ்பத்திரியின் இரண்டாம்கட்டம் ஆரம்பிக்கப்படாமை : காரணம்

கெளரவ எஸ். சிறீதரன்,— சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) முல்லைத்தீவு, மாங்குளம், மல்லாவி, முழங்காவில், பூநகரி மற்றும் பளை ஆகிய பிரதேசங்களிலிருந்து தினந்தோறும் சிகிச்சை பெறுவதற்காக நோயாளிகள் கிளிநொச்சி மாவட்ட பெரியாஸ்பத்திரிக்கு வருகின்றனரென்பதையும்;

(ii) 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த வைத்தியசாலையில் எவ்விதமான நிர்மாணப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்;

(iii) சிறுநீரக நோயாளிகளுக்கான குருதி ஊடுபிரித்தல் கருவி பொருத்தப் பட்டிருப்பினும் அவை இயங்குவதில்லை என்பதையும்;

(iv) திடீர் விபத்துக் கூறு ஒன்றும் இல்லையென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) ஆமெனில், குருதி ஊடுபிரித்தல் நிலையம் மற்றும் திடீர் விபத்துக் கூறினை இயங்கும் நிலைக்கு கொண்டுவரும் திகதி யாது;

(ii) அதற்காக நிதியேற்பாடு ஒதுக்கப்பட்டுள்ளதா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) இந்த வைத்தியசாலையின் முதற்கட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி வழங்கியதென்பதை அவர் அறிவாரா;

(ii) இரண்டாம் கட்டம் இதுவரை ஆரம்பிக்கப்படாமைக்கான காரணங்கள் யாவை;

(iii) அது கைவிடப்பட்டுள்ளதா;

(iv) இன்றேல் அது ஆரம்பிக்கப்படும் திகதி யாது;

(v) அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-25

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-07-25

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks