பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சுகாதாரத் திணைக்களத்தினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, பாலூட்டும் தாய்மார்களுக்கு மற்றும் 5 வயதுக்குக் குறைந்த நிறை குறைந்த பிள்ளைகளுக்கு போசாக்குமிக்க உணவான "திரிபோசா" வழங்கப்பட்டதென்பதையும்;
(ii) அவ்வாறு வழங்கப்பட்ட திரிபோசா, கடந்த 3 மாதத்துக்கு மேற்பட்ட காலத்திலிருந்து மலையகம் உள்ளிட்ட அநேகமான பிரதேசங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) திரிபோசா வழங்கப்படாமைக்கான காரணங்கள் யாவை;
(ii) அரசாங்கத்தினால் இற்றைவரை இலவசமாக வழங்கப்பட்ட திரிபோசாவை தனியார் சிறப்புச் சந்தைத் தொகுதிகள் ஊடாக விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அண்மையில் ஊடகங்களில் வௌியிடப்பட்ட அறிக்கைகளில் உண்மைத்தன்மை உள்ளதா;
(iii) திரிபோசாவை, ஏற்புடைய மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா;
(iv) ஆமெனில், அத்திகதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-06-06
கேட்டவர்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2017-06-06
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks