பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2017-02-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

1278/2017: The Cooperative Loan Society for Educational Service - lax financial regulation

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015.10.01 ஆம் திகதியாகின்றபோது கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் வழங்கும் சங்கத்திற்கு சொந்தமாகவிருந்த மொத்தப் பணத்தொகை எவ்வளவென்பதையும்;

(ii) 2016.06.11 ஆம் திகதியாகின்றபோது மேற்படி சங்கத்திற்கு சொந்தமாகவிருந்த நிலையான வைப்புக்களின் அளவு எவ்வளவென்பதையும்;

(iii) தற்போது மேற்படி சங்கத்திலிருந்து கடன் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி கடன் விண்ணப்பதாரிகளில், கடன் அங்கீகரிக்கப்பட்டிருந்தும் இற்றைவரை கடன் தொகை விடுவிக்கப்படாதுள்ள விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(v) மேற்படி கடன் விண்ணப்பதாரிகளுக்கு செலுத்த வேண்டியுள்ள மொத்த கடன் தொகை எவ்வளவென்பதையும்;

(vi) மேற்படி கடன் விண்ணப்பதாரிகளுக்கு கடன் விடுவிக்கப்பட தாமதம் ஏற்பட்டுள்ளமைக்கான காரணம் யாதென்பதையும்;

(vii) மேற்படி சங்கம் தனது அங்கத்தவர்களுக்கு உரியவாறு கடன் தொகையை விடுவிப்பதற்கு இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

(viii) ஆமெனில், மேற்படி சங்கத்தின் நிதி நிருவாகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-02-21

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks