01

E   |   සි   |  

 திகதி: 2010-08-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0372/2010: Quashi Judjes

0372/’10

கெளரவ நூர்தீன் மசூர்,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதியளவில் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய நிருவாக மாவட்டங்களில் முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டத்தை அமுல்படுத்துவதற்காக, 1965ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க காதி நீதிமன்ற (நியமனங்களை செல்லுபடியாக்குதல்) சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டிருந்த காதி நீதிபதிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

(ii) அவர்களின் பெயர்கள், முகவரிகள் யாவையென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) அம்மாவட்டங்களில் மேற்கூறிய திகதியளவில் தாபிக்கப்பட்டிருந்த காதி நீதிமன்ற வலயங்கள் அல்லது ஆளுகைப் பிரதேசங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

(ii) அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்

மாவட்ட மட்டத்தில் அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-08-18

கேட்டவர்

கௌரவ நூர்டீன் மசூர், பா.உ.

அமைச்சு

நீதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks