02

E   |   සි   |  

 திகதி: 2017-05-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1163/2017: மினிப்பே அணைக்கட்டின் உயரத்தை உயர்த்துதல் : கமக்காரர்கள் பாதிப்பு

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மகாவலி கங்கையின் மினிப்பே அணைக்கட்டின் உயரத்தை 12 அடிகளால் உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றதென்பதையும்;

(ii) இதன் காரணமாக சேருவில, மூதூர் மற்றும் வெருகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22,500 ஏக்கர் காணிகள் நீர் கிடைக்காமையால் தாக்கத்துக்கு உள்ளாவதோடு, ஏறக்குறைய 80,000 கமக்காரர்கள் பாதிக்கப்படுவர் என்பதையும்;

(iii) இதற்கு முன்னர் இந்த அணைக்கட்டின் உயரம் 3 மீற்றர்களால் உயர்த்தப்பட்டதன் காரணமாக சேருவில, மூதூர், விஜிதபுர மற்றும் வெருகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த கமக்காரர்களுக்கு இரண்டு போகங்களிலும் பயிர்செய்ய இயலாமல் போயுள்ளதென்பதையும்;

(iv) அணைக்கட்டின் உயரத்தை 12 அடிகளால் உயர்த்துவதன் மூலம் அப்பிரதேச மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகின்றதென்பதையும்;

(v) மேற்படி விடயம் சம்பந்தமாக 2016.09.04 ஆந் திகதி திருகோணமலை நகரசபை மண்டபத்தில் 42 கமக்காரர் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து ஊடக சந்திப்பொன்றினை நடத்தியுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) இவ்விதமாக கமக்காரர்கள் பாதிக்கப்படுவார்களாயின், நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் எடுக்க எதிர்பார்க்கின்ற நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-05-24

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-05-24

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks