பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1129// '16
கௌரவ எஸ்.எம் மரிக்கார்,— மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) 2016.09.22 ஆம் திகதியன்று மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் கொட்டிக்காவத்த, முல்லேரியா பிரதேச சபையின் செயலாளர் ஆரம்ப விசாரணையோ நியாயமான காரணங்களோ இன்றி இடமாற்றம் செய்யப்பட்டார் என்பதையும்;
(ii) ஆரம்ப விசாரணையின்றி இடமாற்றங்கள் வழங்க வேண்டாமென்றும், மேற்படி இடமாற்றம் இரத்துச் செய்யப்பட வேண்டுமென்றும் மேல் மாகாண ஆளுநரினால் அன்றைய தினமே அறிவிக்கப்பட்டதென்பதையும்;
(iii) மேல் மாகாண ஆளுநரினால் அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், மேல் மாகாண செயலாளரோ அல்லது உள்ளூராட்சி ஆணையாளரோ அதனை நடைமுறைப்படுத்த தவறிவிட்டார்கள் என்பதையும்;
(iv) இந்த நிலையில், அதற்கு சில தினங்களுக்கு பின்னர் உள்ளூராட்சி ஆணையாளர் பிரதேச சபைச் செயலாளருக்கு அழுத்தம் பிரயோகித்து சுயவிருப்பத்துடன் இடமாற்றத்தை பெறுவதாக விருப்பத்தை பெற்றுள்ளார் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) உள்ளூராட்சி நிறுவனமொன்றின் பதவிக் காலம் முடிந்துள்ள நிலையில் மேற்படி உள்ளூராட்சி நிறுவனத்தின் செயலாளரை ஆரம்ப விசாரணை எதுவுமின்றி இடமாற்றம் செய்ய முடியுமா என்பதையும்;
(ii) மேற்குறிப்பிட்ட (அ)(iii) இல் சொல்லப்பட்டுள்ள தவறிழைப்பு நடைபெறவில்லை எனில், அதனை நிரூபிக்க முடியுமா என்பதையும்;
(iii) இச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவாரா என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-02-21
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2017-02-21
பதில் அளித்தார்
கௌரவ சனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks