02

E   |   සි   |  

 திகதி: 2017-05-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

1045/2017: உள்ளூராட்சித் தொகுதி எல்லைகள் மீள்வரையறை: மேன்முறையீட்டுக் குழு

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2012 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டத்தின் படி, உள்ளூராட்சித் தொகுதி எல்லைகள் தொடர்பான மேன்முறையீடுகளை ஆராய்வதற்காக மேன்முறையீட்டுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதா;

(ii) ஆமெனில், இக்குழுவினால் 2016 ஒக்டோபர் 31 ஆம் திகதியில் உள்ளவாறு மேன்முறையீடுகளை ஆராய்ந்து முடிவுறுத்தப்பட்டுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் எண்ணிக்கை எவ்வளவு;

(iii) மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் பெயர்கள் யாவை;

(iv) மேற்படி உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இதுவரை தேர்தல் நடத்தப்படாதிருப்பது ஏன்;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-05-05

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-07-04

பதில் அளித்தார்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks