01

E   |   සි   |  

 திகதி: 2016-12-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

1041/2016: வெலிஓயவில் மீள்குடியமர்த்தப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் : வீடமைப்புக் கடன்

1041/ '16

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) (i) சப்புமல்தென்ன, வெலிஒய பிரதேசத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வீடமைப்புக் கடன் வழங்கப்பட்டுள்ளதா;

(ii) ஆமெனில், இந்த உத்தியோகத்தர்களில் இராணுவ சேவையில் ஈடுபட்டுள்ள 13 பேருக்கு வீடமைப்புக் கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமைக்கான காரணம் யாது;

(iii) மேற்படி 13 பேருக்கும் வீடமைப்புக் கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-12-08

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(அ)  (i)       சப்புமல்தென்ன, வெலிஓய பிரதேசத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வீடமைப்புக்   கடன் வழங்கப்படவில்லை. அத்துடன், கடன் பெறுவதற்காக எந்தவித  கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை.

           (ii)       கடன் பெறுவதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படாததால் ஏற்புடையதாகாது. 

   (iii) வீடமைப்புக் கடன் வழங்குவதற்கான அதிகாரம் எமது அமைச்சுக்கு இல்லை. அரசாங்க உத்தியோகத்தர்கள்   தங்களுடைய திணைக்களங்களினூடாக வீடமைப்புக் கடனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

(ஆ) ஏற்புடையதாகாது.

பதில் தேதி

2017-02-08

பதில் அளித்தார்

கௌரவ டி.எம். சுவாமிநாதன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks