பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1034/ '16
கெளரவ இந்திக அநுருத்த ஹேரத்,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான "விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் கருத்திட்டத்தின்" கீழ் 11 விளையாட்டரங்குகளையும் 10 விளையாட்டரங்குத் தொகுதிகளையும் நிர்மாணிப்பதற்காக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 1,348 மில்லியனில் இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டரங்குகள் மற்றும் விளையாட்டரங்குத் தொகுதிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள விளையாட்டரங்குகள் மற்றும் விளையாட்டரங்குத் தொகுதிகள் யாவை என்பதையும்;
(iii) இந்த வருடத்துக்குள் வேலைகளை பூர்த்தி செய்து விளையாட்டு வீரர்களின் பாவனைக்காக வழங்கக் கூடியதாயுள்ள விளையாட்டரங்குகள் மற்றும் விளையாட்டரங்குத் தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) கிராமிய விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு வசதிகளை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 320 மில்லியனில் நடைமுறைப் படுத்தப்பட்ட கருத்திட்டங்கள் யாவையென்பதையும்;
(ii) "கிரீடா சக்தி" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறைத் திறமைகளை விருத்தி செய்வதற்காக இந்த வருடத்தினுள் இனங்காணப்பட்டுள்ள விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) கம்பஹா மாவட்டத்துக்காக நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மீரிகம டி.எஸ் சேனாநாயக்கா கல்லூரி விளையாட்டரங்கின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-12-08
கேட்டவர்
கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks