பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1032/'16
கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) (i) வடக்கு கிழக்கில் நிலவிய மோதல்களின் காரணமாக இடம்பெயர்ந்த மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) 2009 ஆம் ஆண்டின் பின்னர், 2015 சனவரி மாதம் வரையிலான காலப் பகுதியில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iii) மேற்படி (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையானது, இடம்பெயர்ந்த மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கையில் எத்தனை சதவீதம் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2016 ஆம் ஆண்டு சனவரி மாதமளவில் நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் ஆட்களின் எண்ணிக்கை தனித்தனியாக யாதென்பதையும்;
(ii) 2016 சனவரி தொடக்கம் செத்தெம்பர் வரையிலான காலப் பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iii) மீள் குடியமர்த்தப்படுவதற்கு எஞ்சியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் ஆட்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;
(iv) மீள்குடியமர்த்தப்படாது மேற்கொண்டும் முகாம்களில் மக்களை தங்கவைத்திருப்பதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(v) மீள்குடியமர்த்தல் நடவடிக்கைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-12-05
கேட்டவர்
கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2017-01-25
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks