01

E   |   සි   |  

 திகதி: 2017-03-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

1014/2017: கமத்தொழில் அமைச்சின் புதிய கட்டிடம்: விபரம்

கெளரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கமத்தொழில் அமைச்சுக்கு வாடகை அடிப்படையில் புதிதாக கட்டிடமொன்று பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி திகதி யாது என்பதையும்;

(iii) அதற்காக கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், கேள்விப்பத்திரம் சமர்ப்பிக்க முன்வந்த ஆட்கள் மற்றும் அவர்கள் சமர்ப்பித்த விலை மனுக்கள் தனித்தனியே யாவை என்பதையும்;

(v) வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட கட்டிடத்திற்கான அரசாங்க விலைமதிப்பு, உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி, மாதாந்த வாடகை மற்றும் செலுத்தப்பட்ட முற்பணத் தொகை யாது என்பதையும்;

(vi) மேற்படி கட்டிடத்திற்காக உரிமையாளருடன் கையொப்பமிடப்பட்ட குத்தகை உடன்படிக்கையை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(vii) கமத்தொழில் அமைச்சு மேற்படி கட்டிடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட திகதி யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-03-07

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-07-04

பதில் அளித்தார்

கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks